இலங்கையில் 2024 ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 197 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 197 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் யானைகளின் தாக்குதல்களினால் 73 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டில் விபத்துக்கள் மற்றும் மனித தாக்குதல்களினால் 479 யானைகள் உயிரிழந்துள்ளன.
அத்துடன், யானைகளின் தாக்குதல்களினால் 169 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.