நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தமானில் இருந்து நாக்கை வந்த ‘சிவகங்கை கப்பல்’ நாளை இலங்கைக்கு சோதனை பயணமாக வருகைத் தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.