Breaking News

இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள்..!!

இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள்..!!


இலங்கையின் இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கான முதலாவது சிறப்புப் பாடநெறியானது சுஸ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தின் பீடாதிபதி சஞ்சீவ் ரஞ்சனால் நேற்று முன்தினம் (05), புதுடில்லியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

23 இலங்கை அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரத்ன முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட குறுகிய கால இந்த பயிற்சித் திட்டம், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி நெறி ஓகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது முன்னதாக இலங்கையின் உள்ளூர் நிர்வாக சேவையினருக்கும் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.