Breaking News

இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களின் நேரடி சந்திப்புக்கு இந்தியா இணக்கம்...!!

இலங்கை- இந்திய கடற்றொழிலாளர்களின் நேரடி சந்திப்புக்கு இந்தியா இணக்கம்...!!

இந்திய மற்றும்  இலங்கை கடற்றொழில் சமூகத்தினருக்கு இடையேயான சந்திப்பிது, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக கடற்றொழிலாளர் குழுவிடம் வென்போளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

இதனை பாரதீய ஜனதாவின் தமிழக தலைவர் அண்ணாமலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவது தொடர்பாக இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுக் கூட்டத்தில் எடுத்துரைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாரதீய ஜனதாவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது, இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான நேரடி சந்திப்பை தமிழக கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன் இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தூதுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜெய்சங்கர், கடற்றொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில், மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.