இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துள்ளார்
குறித்த சந்திப்பானது நேற்று இடம்பெற்றுள்ளதுடன் நிர்மலா சீத்தாராமன் மீண்டும் இந்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற முதல் சந்திப்பாக அமைந்துள்ளது.
இதன்போது இரண்டு தரப்பினரும் இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக மாத்திரம் நியமிக்கப்பட்டிருந்த நிர்மலா சீத்தாராமன், தற்போதைய அமைச்சரவையில் நிதியமைச்சுக்கு மேலதிகமாக பெரு நிறுவனங்களின் கண்காணிப்பு என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.