Breaking News

6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு - முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு

6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு - முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு

இலங்கைக்கு இன்று முற்பகல் 11.30 மணியளவில் சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் சீனாவினால் நன்கொடையாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னரே, அதனை இலங்கை பிரஜைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.