இலங்கை
இலங்கையில் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவி மற்றும் சமூக சுகாதார வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.