Breaking News

கொட்டும் மலையில் உதயநிதி - தன்னுடைய தொகுதி மட்டுமன்றி எல்லோருக்கும் உதவி...!!

கொட்டும் மலையில் உதயநிதி - தன்னுடைய தொகுதி மட்டுமன்றி எல்லோருக்கும் உதவி...!!

இந்தியா: தமிழ்நாடு

சென்னையை ஒரு புரட்டு புரட்டிபோட்டுவிட்டு போய்விட்டது இந்த மிக்ஜாம் புயல். அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் என பாரபட்சமின்றி வெள்ள நீர் புகுந்து நிரம்பியுள்ளது.

இந்த தண்ணீரில் நின்றுகொண்டு மழையையும் பொருட்படுத்தாமல், திமுக அரசு தீவிரப்பணிகளை மேற்கொண்டுள்ளது. முறிந்து விழுந்த மரங்கள் ஒருபக்கம், பலத்த காற்று மறுபக்கம் என கொட்டும் மழைக்கு நடுவில், மாநகராட்சி ஊழியர்களின் பணிகள் பாராட்டத்தக்கவை.. இடைவிடாமல் மழை பெய்து வருவதால், நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது என்றாலும், மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இந்த பணிகளை, சென்னைவாசிகள் நெகிழ்ந்து பாராட்டியும், நன்றி சொல்லியும் வருகின்றனர். அதேபோல, கடந்த 2 நாட்களாகவே உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் சென்னைவாசிகளின் கவனத்தை திருப்பி வருகின்றன.

மழை கோட் அணிந்துகொண்டு, முகமெல்லாம் ஒருவித கலக்கமும், பதற்றத்துடன், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் உதயநிதியின் போட்டோக்களும் வெளியாகியபடி உள்ளன.

தன்னுடைய தொகுதி என்றில்லாமல், பாதிக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ, அங்கெல்லாம் சென்று நேரில் சந்தித்து, உதவி அளித்து வருகிறார் உதயநிதி. 

முக்கியமாக, திருவல்லிக்கேணி பகுதி, மாட்டாங்குப்பம், மற்றும் வி.ஆர். தெரு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். அத்துடன், தண்ணீர் தேங்கிய பகுதிகள், சேதமடைந்த வீடுகள் என மழையாலும் காற்றாலும் ஏற்பட்ட பாதிப்புகளையும் மக்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தந்து கொண்டிருக்கிறார்.

அரசு - கழகத்தினர் தன்னார்வலர்கள் - பொதுமக்கள் என ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பேரிடரிலிருந்தும் மீண்டு வருவோம் என்று உதயநிதி ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அது தொடர்பான போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார்.