நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர். இவரது நடிப்பில் வெளியான டான், பிரின்ஸ், மாவீரன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் வெளியாகி இருந்தன.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது, ஆனால் படம் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படம் Sci-Fi கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில் விரையில் படத்தின் பெயர் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் லீக்கான காட்சி என்னவென்றால் சாய்பல்லவி மற்றும் அவரது குழந்தை, சிவகார்த்திகேயனுக்காக காத்திருப்பதாக காட்சிகள் அமைந்துள்ளன.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்தக் காட்சிகளை பகிர வேண்டாம் என்று சமூக வலைதளத்தில் கேட்டு வருகின்றனர்.