தெற்கு Canterbury நகரமான Fairlie இல் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து தீக்கிரையாகி உள்ளன.
மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் நகரின் பிரதான வீதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
இந்த தீ பரவல் ஒரு கட்டிடத்திற்குள் இருந்த மூன்று கடைகளை கடுமையாக சேதப்படுத்தியதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறியது.
மேலும் புலனாய்வாளர்கள் தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
செய்தி நிருபர் - புகழ்