North Island இல் இன்று கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் Tairāwhiti இல் உள்ள Tolaga Bay இற்கு வடக்கே கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் North Island இல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், இன்று இரவு 8 மணி வரை ஆக்லாந்து, Coromandel Peninsula, Waikato மற்றும் Bay of Plenty ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் MetService எதிர்பார்க்கிறது.
புயல்கள் கடுமையானதாக மாறக்கூடும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 45 மில்லிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் MetService தெரிவித்துள்ளது.
செய்தி நிருபர் - புகழ்