Christchurch இல் உள்ள Port Hills இல் ஏற்பட்ட காட்டுத் தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் இந்த தீ பரவல் ஏற்பட்டது.
தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மூன்று தீயணைப்புக் குழுவினர் மற்றும் மூன்று ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் தற்போது அது கட்டுக்குள் உள்ளது என்றும் கூறினார்.
தீயினால் கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மதியம் 2 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Port Hills சாலைக்கும் Chapmans சாலைக்கும் இடையே மாநில நெடுஞ்சாலை 76 மூடப்பட்டுள்ளது.
முடிந்தால் அப்பகுதியை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
செய்தி நிருபர் - புகழ்