Breaking News

‛மிஸ் யுனிவர்ஸ் 2023’ அழகியாக ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்வு....!!

‛மிஸ் யுனிவர்ஸ் 2023’ அழகியாக ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்வு....!!

மிஸ் யுனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான போட்டி மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில் நடந்து வருகிறது. அந்த நாட்டின் தலைநகரான சான் சால்வடாரில் இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியை முன்னாள் பிரபஞ்ச அழகி ஒலிவியா கல்போ நடத்துகிறார். சான்சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் இந்த பைனல் போட்டி தொடங்கியது. இதில் மொத்தம் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்த அழகி போட்டியில் நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யூனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றுள்ளார். மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்ற ஷெய்னிஸ் பலாசியோஸ் மேடையிலேயே ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

டாப் 3 இடத்துக்கு தாய்லாநதை சேர்ந்த போர்ஷில்ட், ஆஸ்திரேலியாவின் மோராயா வில்சன், நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்வாகினர். இதில் ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார்.