நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 7881 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 4073 மீண்டும் தொற்றுக்குள்ளானவர்கள் ஆவர்.
இது நவம்பர் 13 திங்கள் முதல் நவம்பர் 19 ஞாயிறு வரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.
மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை (19) நள்ளிரவு நிலவரப்படி தீவிர சிகிச்சை பிரிவில் 02 பேர் உட்பட 349 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தி நிருபர் - புகழ்