இந்த வார இறுதியில் Canterbury இல் உள்ள கடற்கரைகள் மற்றும் ஆறுகளில் நீந்தும் நீச்சல் வீரர்கள்,நீர் நிலைகள் நீச்சலுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என சரிபார்க்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
Lyttelton மற்றும் Akaroa துறைமுகங்களுக்குள் உள்ள Akaroa Main Beach, Corsair Bay, Rāpaki Bay, Sandy Bay, Diamond Harbour Beach மற்றும் Purau Beach Rāpaki Bay, were போன்ற பிரபலமான இடங்கள், தரமற்ற தண்ணீர் காரணமாக அவை நீந்துவதற்கு பாதுகாப்பற்றவை என Te Whatu Ora எச்சரித்துள்ளது.
நீச்சல் இடங்களின் பாதுகாப்பு குறித்த புதுப்பித்த தகவல்களை Land Water Aotearoa இணையதளத்தில் காணலாம் என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Canterbury இன் சுகாதார அதிகாரி செரில் ப்ருண்டன் கூறுகையில், கேன்டர்பரி பிராந்திய கவுன்சில் வாராவாரம் நீரைச் சோதித்து, எந்தெந்த நீர்நிலைகளில் பாதுகாப்பற்ற அளவு பாக்டீரியா அல்லது சயனோபாக்டீரியா (நச்சுப் பாசிகள்) உள்ளது என்று ஆலோசனை கூறுகிறது.
இவை நீச்சல் வீரர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதனால்தான் நீங்கள் நீங்குவதற்கு முன் அந்த இடத்தில் நீந்துவது பாதுகாப்பானதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
கனமழைக்குப் பிறகு நீர் நிலைகள் மாசுபட வாய்ப்புள்ளது.
ஒரு முன்னெச்சரிக்கையாக, பொதுவாக நல்ல தரம் உள்ள நீர் நிலைகளில் கூட, கடுமையான அல்லது நீடித்த மழைக்குப் பிறகு குறைந்தது 48 மணிநேரத்திற்கு துறைமுகம், ஆறுகள், ஓடைகள், ஏரிகள் அல்லது முகத்துவாரங்களில் நீந்துவதைத் தவிர்க்கவும் என அவர் தெரிவித்தார்.
செய்தி நிருபர் - புகழ்