Breaking News

Dargaville இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்...!!

Dargaville இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்...!!

Dargaville இல் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மதியம் 2.50 மணிக்கு ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது என பொலிஸார் தெரிவித்தனர்.

Colville வீதியை ஒட்டியுள்ள வெள்ள வாயில் பகுதியில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் பயணி இருவரும் ஆபத்தான நிலையில், விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்