இலங்கை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 78 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (17) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் போது, 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் நிதியுதவி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வழங்கப்பட்டது.
மேலும், குறித்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வந்திருந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகா சங்கரத்னய பிரித் ஓதி ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
இதேவேளை, நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காததால், நிகழ்வின் பின்னர் வெளியில் வந்த மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த நிகழ்வு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், வேறு ஒருவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு தான் வந்ததாக அவர் தெரிவித்தார்.