Greymouth பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Omoto வீதி / மாநில நெடுஞ்சாலை 6 இல் காலை 10 மணிக்குப் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என பொலிஸார் தெரிவித்தனர்.
Cobden பாலத்திற்கு கிழக்கே நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது, மேலும் சில மணிநேரங்களுக்கு மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் - புகழ்