Breaking News

'தீவாளி எஸ் ஏ' யில் கலக்கிய சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்

'தீவாளி எஸ் ஏ' யில் கலக்கிய சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்

தீபாவளியை 'தித்திக்கும் தீபாவளி, வண்ண வண்ண ஆடைகளின் தீபாவளி, வாணவேடிக்கைகளின் தீபாவளி’ என எவ்வாறெல்லாம் வருணித்துக் கொண்டாடுகிறோமோ அதே அளவு நம் உறவுகளின் சங்கமத்தையும் மனம் விரும்பி கொண்டாட நினைக்கின்றோம். நம்மில் பெரும்பான்மையோரின் குடும்பமும்,உறவுகளும் இந்தியாவில் இருக்க, இங்கே நட்பே உறவுகளாக மாறி மகிழ சான் ஆண்டோனியோவில் மட்டுமே நிறைய தீபாவளிக்கு உண்டு!

 
நம் சங்கத்தின் தீபாவளி கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஓர் கொண்டாட்டம் மிக விரைவில் வரவிருக்க, சமீபத்தில் 'தீவாளி எஸ் ஏ' எனும் இந்தியாவின் நகரங்கள்,கிராமங்கள் என மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் இங்கு வந்து வாழவந்த அனைவரும் மட்டுமல்லாது, அமெரிக்கர்கள், மெக்சிகர்கள் என பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த தீவாளியில் நம் சங்கம் மிகச் சிறப்பு நிகழ்ச்சிகள் சில அளித்து, பார்த்த அத்தனை பேர்களையும் அசரச் செய்தது என்றே சொல்ல வேண்டும்!

 
பார்ஜ்-அலங்கரிக்கப்பட்ட படகில் இந்தியாவின் முதுகெலும்பென போற்றப்படும் நெசவுத் தொழிலை மையமாகக் கொண்டு தறியை இந்தியாயில் இருந்து வரவழைத்து அலங்கரிக்கப்பட்டு, இங்கு சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள்,சங்கத்தின் தன்னார்வலர்கள் என பலரின் உதவியினால் படகில் நிறுத்தியபடி, அழகாய் ஆடிப்பாடியும் நகர்ந்து சென்றது அனைவராலும் போற்றப்பட்டது. இதற்கு முயற்சி எடுத்த அத்தனை பேரையும் மனதார பாராட்ட வேண்டும்.

 
மேலும் நம் சங்க உறுப்பினர் திரு.மோகன் தாமோதரன் தலைமையில் கிட்டத்தட்ட 35 பேர்கள் இணைத்து அளித்த 'பறை’மற்றும் மரபுக்கலைகளின்  நடனம் சிறப்பின் உச்சம்! அதற்கான உழைப்புகள் ஏராளம்! பாராட்டுக்கள்!

 
அடுத்து 'கோலம் குழுவினர்' நம் தமிழகத்தின் பாரம்பரியத்தை சித்தரித்து அற்புதமாக வரைந்து பிற மாநிலங்களுடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை வென்றது மிக மிகச் சிறப்பு! பாராட்டுக்கள்!

 

அதனை அடுத்து நம் சங்க உறுப்பினர் திரு.சதிஷ்,தம் குழுவினர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடங்களுக்கு மேற்கத்திய நடனங்கள் அளித்தது தமிழ்நாடு அனைத்திலும் சிறப்பு எனக் காட்டியது. பாராட்டுக்கள்!

 

'தீவாளி எஸ் ஏ'யில் இவ்வாறு சிறப்பித்த அனைவருக்கும் நம் சங்க உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள்!

எமது நிருபர் - ஷீலா ரமணன்