Breaking News

ஹமில்டன் துப்பாக்கி கிளப்பில் பல துப்பாக்கிகளை திருடிய மூவர் கைது...!!

ஹமில்டன் துப்பாக்கி கிளப்பில் பல துப்பாக்கிகளை திருடிய மூவர் கைது...!!

நவம்பர் தொடக்கத்தில் ஹமில்டனில் உள்ள துப்பாக்கி கிளப்பில் பதினான்கு துப்பாக்கிகள் மற்றும் பெரிய அளவிலான வெடிமருந்துகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வாரம் ஹமில்டன் பகுதியில் உள்ள வீடுகளில் வைகாடோ தந்திரோபாய குற்றக் குழு மற்றும் ஆயுதமேந்திய குற்றவாளிகள் குழு மேற்கொண்ட அதிரடி சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

ஒரு முகவரியில், மூன்று துப்பாக்கிகள் மற்றும் ஒரு வில் மற்றும் அம்புகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.

31 மற்றும் 33 வயதுடைய இரண்டு ஆண்களும், 27 வயதுடைய ஒரு பெண்ணும், திருட்டு மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், மேலதிக கருத்துகளை தெரிவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு தொடர்பான விசாரணை தொடர்கிறது.

செய்தி நிருபர் - புகழ்