Breaking News

தளபதி 68 ஸ்பாட்டில் விஜய் எடுத்த க்யூட் போட்டோ...!!

தளபதி 68 ஸ்பாட்டில் விஜய் எடுத்த க்யூட் போட்டோ...!!

நடிகர் விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். 'தளபதி 68’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. அதனுடன் தளபதி 68ல் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, யோகி பாபு, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடிப்பதையும் படக்குழு உறுதி செய்தது.

அதேவேகத்தில் தளபதி 68 படப்பிடிப்பைத் தொடங்கிய வெங்கட் பிரபு, முதலில் சென்னை அடுத்து தாய்லாந்து என இரண்டு ஷெட்யூல்களை முடித்துவிட்டார். இந்நிலையில் தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் லோகேஷ், அட்லீ, நெல்சன் என தனது அன்புத் தம்பிகளை போட்டோ எடுத்திருந்தார் விஜய்.

அதேபோல், இந்தமுறை தனது நண்பர்களை க்யூட்டாக க்ளிக் செய்துள்ளார். அதாவது நடனப் புயல் பிரபுதேவா, ஸ்ரீமன் இருவரையும் ஸ்மார்ட்டாக போட்டோ எடுத்துள்ளார் தளபதி விஜய்.

போக்கிரி, வில்லு என விஜய் நடிப்பில் இரண்டு படங்களை இயக்கியுள்ள பிரபுதேவா, தளபதி 68ல் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். அதேபோல் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஸ்ரீமனுக்கு தனி இடமே உள்ளது. விஜய், பிரபுதேவா, ஸ்ரீமன் இடையேயான இன்னொரு ஒற்றுமை என்றால், இவர்கள் மூவருமே சூப்பரான டான்ஸர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 68 ஸ்பாட்டில் விஜய் எடுத்த இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதேநேரம் இந்தப் படத்தில் ஸ்ரீமன் நடித்து வருவதும் உறுதி ஆகியுள்ளது.