Breaking News

தீபாவளி ரேஸில் தடுமாறிய ஜப்பான் - அதேவேகத்தில் கார்த்தி எடுத்த அதிரடி முடிவு...!!

தீபாவளி ரேஸில் தடுமாறிய ஜப்பான் - அதேவேகத்தில் கார்த்தி எடுத்த அதிரடி முடிவு...!!

நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் 10ம் திகதி வெளியானது. ராஜூ முருகன் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில், கேஎஸ் ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவான ஜப்பானுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், திரைக்கதை, மேக்கிங் போன்றவற்றில் சொதப்பியதால் ஜப்பானுக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன. இந்தப் படம், இதுவரை 13 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். கார்த்திக்கு, ஜப்பான் படத்தின் தோல்வி பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

முக்கியமாக ஜப்பான், கார்த்தியின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் தொடர்ந்து நெகட்டிவாக ட்ரோல் செய்யப்பட்டு வருவதால், அதிரடியாக முடிவெடுத்துள்ளார் கார்த்தி. அதன்படி தனது 27வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துவிட்டார். 96 மூவி மூலம் பிரபலமான பிரேம்குமார், கார்த்தியின் 27வது படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் கார்த்தி 27 படத்தின் ஷூட்டிங் இன்று முதல் கும்பகோணத்தில் தொடங்குகிறதாம். இதில் கார்த்தியுடன் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தொடங்கும் ஷூட்டிங் அடுத்தடுத்து வேகமாக நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் உறுதி ஆகவில்லை. இதனிடையே இன்னொரு பக்கம் நலன் குமாரசாமி இயக்கும் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இந்தப் படம் மீதும் இப்போதே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் கார்த்தி, ஜப்பான் படத்தில் விட்டதை இந்த இரண்டிலும் பிடிக்கலாம் என கடுமையாக உழைத்து வருகிறார்.