ஆக்லாந்தில் உள்ள பிரபல ரக்பி லீக் கிளப் கட்டிடம் தீக்கிரையாகி உள்ளது.
Mt Albert இல் உள்ள Marist Saints Rugby League கிளப் கட்டிடத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில் ரக்பி கிளப் கட்டிடம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
தீவிபத்து குறித்து பொலிஸார் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த தீ விபத்து ஒட்டுமொத்த ரக்பி லீக் சமூகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தியதாக ஆக்லாந்து ரக்பி லீக் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் - புகழ்