Breaking News

ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற தீவிர விபத்து - ஒருவர் படுகாயம்...!!

ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற தீவிர விபத்து - ஒருவர் படுகாயம்...!!

இன்று காலை ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் Takanini இற்கு அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

காலை 9.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து காலை அனைத்து வடக்குப் பாதைகளும் மூடப்பட்டன.

இதனால் வாகன ஓட்டிகள் காலதாமதத்தை சந்திக்க நேரிடும் என பொலிஸார் எச்சரித்தனர்.

தீவிர விபத்து பிரிவு சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டது.

செய்தி நிருபர் - புகழ்