பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் சரவண விக்ரமுக்கு ஏகப்பட்ட ஆதரவாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். எக்ஸ் தளத்தில் அதுவும் தேசிய அளவில் தினமும் டிரெண்டாகி வருகிறார் என்றால் பாருங்களேன்.
இன்று கூட #Saravanavickram என்கிற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது. விக்ரமுக்கு எப்படிப்பா திடீரென்று இவ்வளவு ஆதரவாளர்கள் கிடைத்தார்கள் என்று கேட்கிறீர்களா? அதற்கு எல்லாம் காரணம் பிரதீப் ஆண்டனி.
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்கள் எல்லாம் தற்போது விக்ரமுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். விக்ரமை தலைவன் ஆக்கியதும் பிரதீப் ஆதரவாளர்கள் தான்.
இந்த வாரத்திற்கான எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இருக்கும் விக்ரமை காப்பாற்ற களத்தில் இறங்கி தீயாக வேலை செய்து வருவதும் அவர்கள் தான். பிரதீப் ஆண்டனியை தான் காப்பாற்றவும் முடியவில்லை, மீண்டும் அழைத்து வரவும் முடியவில்லை. குறைந்தபட்சம் தலைவன் விக்ரமையாவது காப்பாற்றி டைட்டில் வின்னர் ஆக்கும் வரை தூங்க மாட்டோம் என சபதம் எடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பலரும் விக்ரமை தலைவன் என கொண்டாடுவதை பிக் பாஸும் கவனித்துவிட்டார். மக்களுடன் சமரசம் செய்துவிடுவோம் என்கிற முடிவில் இருக்கிறார் பிக் பாஸ் என்பது இன்றைய இரண்டு ப்ரொமோ வீடியோக்களை பார்க்கும்போது தெரிகிறது.
முதல் ப்ரொமோ வீடியோவில் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் விக்ரம் என்றார்கள். இதையடுத்து வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் விக்ரம் நல்ல பிளேயர் என மாயாவையே சொல்ல வைத்திருக்கிறார் பிக் பாஸ்.
மாயா அங்கு விக்ரமை காப்பாற்றுவது பற்றி சீரியஸாக பேசிக் கொண்டிருக்க, தலைவனோ ரவீணா தாஹாவுடன் தலையணை சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். 6 போட்டியாளர்கள் நாமினேட் செய்திருக்கும் விக்ரமை காப்பாற்ற ஏகப்பட்ட ஆதரவாளர்கள் களத்தில் குதித்துவிட்டதை பார்த்த பிக் பாஸே, தலைவனை காப்பாற்ற முடிவு செய்தது இந்த இரண்டாவது ப்ரொமோ வீடியோ மூலம் தெரிகிறது.
இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
விக்ரம் பற்றி மாயா சொல்வது தான் சரி. எங்கள் டைட்டில் வின்னர் சரவண விக்ரமிடம் உடனே மன்னிப்பு கேட்கவும் பிக் பாஸ். இனியும் அவரை கிண்டல் செய்தால் சும்மா இருக்க மாட்டோம். இதுவே உங்களுக்கு கடைசி எச்சரிக்கை பிக் பாஸ்.
பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனை ஓடிக்கிட்டிருக்கு. ஆனால் நம்ம டைட்டில் வின்னர் என்னய்யா தலையணை சண்டை போட்டுக்கிட்டு இருக்காரு. ஹய்யோ ஹய்யோ, தலைவன் இன்னும் சின்னப் புள்ளயாவே இருக்காரு என தெரிவித்துள்ளனர்.