Breaking News

ஆக்லாந்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் - குற்றவாளி காவல் நிலையத்தில் சரண்...!!

ஆக்லாந்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் - குற்றவாளி காவல் நிலையத்தில் சரண்...!!

ஆக்லாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதை‌ அடுத்து விசாரணை தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஆகஸ்ட் 3 அன்று மத்திய ஆக்லாந்தில் உள்ள Queen தெருவில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கிரேக் போல்டன் கூறுகையில், இன்று காலை ஆக்லாந்து மத்திய காவல் நிலையத்தில் 24 வயது நபர் ஒருவர் சரணடைந்ததாக தெரிவித்தார். 

இதனையடுத்து இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்