Breaking News

Wainuiomata வில் பெண் ஒருவரை ஆயுத முனையில் அச்சுறுத்திய நபர்‌ பொலிஸாரால் சுட்டுக் கொலை...!!

Wainuiomata வில் பெண் ஒருவரை ஆயுத முனையில் அச்சுறுத்திய நபர்‌ பொலிஸாரால் சுட்டுக் கொலை...!!

Wainuiomata வில் பெண் ஒருவரின் கழுத்தில் ஆயுதத்தை வைத்து அச்சுறுத்திய நபர்‌ ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு அறிக்கையில், காலை 11.45 மணியளவில் Coast சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நபர்‌ ஒருவர் வன்முறையில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் அங்கு வந்தபோது, ​​ஒரு ஆண் ஒரு பெண்மணியின் கழுத்தில் ஆயுதம் ஏந்தியவாறு கலவரத்துடன் நடந்துகொண்டிருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்திய போதும் அந்த நபர் தொடர்ந்து பெண்ணை அச்சுறுத்தினார், இந்நிலையில் மதியம் 1 மணியளவில் பொலிசார் அந்த நபரை ஒரு முறை சுட்டனர்.

அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது, ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட பெண் காயமடையவில்லை, ஆனால் நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கண்காணிப்பாளர் கோரி பார்னெல், இறந்தவரின் குடும்பத்தினருக்கு அவர் தனது இரங்கலை தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்பு விரிவான பேச்சுவார்த்தைகள் நடந்தன என, பார்னெல் கூறினார்.

தற்போது பல விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், இந்த விடயம் சுயாதீன பொலிஸ் நடத்தை அதிகார சபைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்