Breaking News

Lower Hutt இல் வாகனம் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு...!!

Lower Hutt இல் வாகனம் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு...!!

Lower Hutt புறநகர்ப் பகுதியான Naenae இல் வாகனம் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5.50 மணியளவில் Naenae சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஹேலி ரியான், உயிரிழந்தவர் ஒரு பெண் எனவும், சாரதி வாகனத்தை நிறுத்தவில்லை என்றும் கூறினார்.

குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது சிசிடிவி காட்சிகள் உள்ள எவரும் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி பீதியடைந்திருக்கலாம் என்றும் அந்த நபர் முன்வர வேண்டும் என்றும் ரியான் கூறினார்.

விபத்து நடந்த இடத்தில் சுமார் 10 அதிகாரிகள் இருந்தனர் மற்றும் சிலர் ஆதாரத்திற்காக புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே Lower Hutt மேயர் காம்ப்பெல் பாரி இது ஒரு பெரிய சோகம் என விவரித்தார்.

இறந்த பெண்ணின் குடும்பத்துடன் தனது எண்ணங்கள் இருப்பதாக பாரி கூறினார்.

மேலும் வாகனத்தின் சாரதி முன்வர வேண்டும் என்றும் விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

செய்தி நிருபர் - புகழ்