தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் கார்த்தி. இவரது நடிப்பில் தற்போது 'ஜப்பான்' படம் வெளியாகியுள்ளது. இந்தாண்டு தீபாவளி ரிலீசாக வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் '96' படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி கவனம் ஈர்த்த பிரேம் குமார் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் கார்த்தி. இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லையாம். முழு படமும் இரவில் நடப்பதை போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'கைதி' படத்தில் ஹீரோயின் இல்லாமல் ஒரே இரவில் நடப்பதை போன்ற கதைக்களத்தில் நடித்தார் கார்த்தி.
இதனையடுத்து தற்போது மீண்டும் அதே பாணியில் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷுட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.