இன்று காலை Bay of Plenty இல் குன்றின் மீது இருந்து விழுந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காலை 9.15 மணியளவில் அவசர சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Bowentown இல் ஒரு பெண் 20 மீட்டர் குன்றில் இருந்து கீழே விழுந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதனையடுத்து தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு மூன்று தீயணைப்பு வீரர்கள் வருகை தந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பெண் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் Tauranga மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
செய்தி நிருபர் - புகழ்