Breaking News

மக்கள் தான் முடிவு பண்ணனும் - விசித்ராவிற்கு நம்பிக்கை கொடுத்த அர்ச்சனா..!!

மக்கள் தான் முடிவு பண்ணனும் - விசித்ராவிற்கு நம்பிக்கை கொடுத்த அர்ச்சனா..!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு அடுத்தபடியாக ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் போட்டியாளராக அர்ச்சனா இருந்து வருகின்றார்.

என்னதான் பிரதீப் சில தவறுகள் செய்திருந்தாலும் அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவரை நிகழ்ச்சியை விட்டு இவர்கள் வெளியேறிவிட்டதாகவே ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் மாயா மற்றும் பூர்ணிமா சக போட்டியாளர்கள் சிலரை சேர்த்து ஒரு டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

அந்த டீமின் அடுத்த டார்கெட்டாக விசித்ரா மற்றும் அர்ச்சனா தான் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். நேற்றைய எபிசோடில் கூட விசித்ரா பேசுகையில், மாயா மற்றும் பூர்ணிமா என்னை தான் தற்போது டார்கெட் செய்கின்றனர். என்னை தவறாக ரசிகர்கள் மத்தியில் காட்ட நினைக்கின்றார்கள் என கூறினார். இதற்கு அர்ச்சனா, நாம் யார் என்று ரசிகர்கள் தான் முடிவெடுப்பார்கள். நாம் எப்படிபட்டவர்கள் என அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். மாயா முடிவு செய்யமுடியாது என நம்பிக்கையாக பேசினார்.

வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அர்ச்சனா முதல் இரு நாட்களில் அழுதுகொண்டு தான் இருந்தார். ஆனால் அதன் பிறகு எதிர் தாக்குதலுக்கு தயாராகி மாயா மற்றும் பூர்ணிமாவை வெளுத்து வாங்கி வருகின்றார். என்னதான் கும்பலாக அவர்கள் அர்ச்சனாவை டார்கெட் செய்தாலும் தனி ஆளாக நின்று சமாளித்து வருகின்றார் அர்ச்சனா.

இந்நிலையில் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் ஆகியோர் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரவேற்பை பெற்று வருகின்றனர். எனவே இவர்கள் கண்டிப்பாக இறுதிப்போட்டி வரை செல்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.