இந்தியா: தமிழ்நாடு
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் நேற்று பிரசாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ராமர் கோவில் தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர் என வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது அமித்ஷாவின் வாக்குறுதி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சீமான், கடைசியாக அமித்ஷாவும் இலவசம் என பேசியிருக்கிறார். அவர்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், பிஜேபியின் சொத்தா ராமர்? உங்களுக்கு கடவுள், எனக்கு கடவுள் இல்லையா? இறைவனையே இலவசமாக்கிவிட்டார்கள் இவர்களது ஆட்சியில். என்ன கொடுமை பாருங்கள். இவ்வளவு ஒரு இழிவான அரசியல் நிலையை எங்காவது பார்த்திருக்கீங்களா என சீமான் காட்டமாக பதிலளித்தார்.