Breaking News

ஹமில்டனில் இருந்து வந்த ரயிலில் இயந்திரக் கோளாறு - ரயில் சேவைகளில் தாமதம்...!!

ஹமில்டனில் இருந்து வந்த ரயிலில் இயந்திரக் கோளாறு - ரயில் சேவைகளில் தாமதம்...!!

புதன்கிழமை காலை ஹமில்டனில் இருந்து வந்த ஒரு ரயில் ஆக்லாந்தில் பழுதடைந்ததை அடுத்து, ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆக்லாந்து டிரான்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக Parnell மற்றும் Britomart இடையே Te Huia ரயில் நிறுத்தப்பட்டது. 44 பயணிகள் பல மணி நேரம் அதில் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில் Britomart நிலையம் வழியாகப் பயணிக்கும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஆக்லாந்து போக்குவரத்து தெரிவித்தது.

இறுதியில் பயணிகள் Strand நிலையத்தில் இறங்கினர்.

ரயில்கள் மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளன, ஆனால் சேவைகள் இன்னும் வழக்கமான நேர அட்டவணைக்கு திரும்பவில்லை.

செய்தி நிருபர் - புகழ்