Breaking News

குண்டா இருக்கீங்க - வினோத காரணம் சொல்லி காதலியை கொன்ற இளைஞரை விடுவித்த நீதிமன்றம்..!!

குண்டா இருக்கீங்க - வினோத காரணம் சொல்லி காதலியை கொன்ற இளைஞரை விடுவித்த நீதிமன்றம்..!!

இத்தாலியில் கடந்த 2017ஆம் ஆண்டில் டிமிட்ரி என்ற இளைஞன் தனது 25 வயது காதலி எரிகா ப்ரீட்டி என்பவருடன் விடுமுறைக்குச் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே பிரட் துகள்கள் குறித்து சண்டை ஏற்பட்டது. அப்போது இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது காதலி எரிகாவை மொத்தம் 57 முறை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்றுள்ளார்.

இது குறித்த விசாரணை நடைபெற்ற நிலையில், 2019இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. டிமிட்ரி தனது காதலியைக் கொலை செய்தது உறுதியான நிலையில், அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், மேல்முறையீடு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அவர் 2022 வரை சிறைக்குச் செல்லவே இல்லை.

இதனையடுத்து சிறைக்குச் செல்லும் போது டிமிட்ரியின் உடல் எடை 120 கிலோவாக இருந்தது. இதற்கிடையே வெறும் ஒரே ஆண்டில் டிமிட்ரியை மருத்துவ காரணங்களுக்காக இத்தாலி நீதிமன்றம் விடுவித்துள்ளது. அதாவது அதிக எடையால் அவதிப்பட்டு வரும் டிமிட்ரி இப்போது உடல் எடையைக் குறைக்க வேண்டும். இதற்கு அவர் குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சிறையில் குறைந்த கலோரி உணவிற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. இதனால் அவருக்கு வழக்கமான உணவே தரப்பட்டுள்ளது.

இதனால் சிறைக்குச் சென்ற பிறகு அவரது உடல் எடை 200 கிலோ வரை அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அவரால் நடக்கவே முடியவில்லையாம். சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் உதவியுடன் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அதிக எடை டிமிட்ரியை சிறைக்குப் பொருந்தாதவராக மாற்றுவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவர் சிறையில் தொடர்ந்து இருந்தால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று குறிப்பிட்டு, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

அதாவது அடுத்த 30 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர் வீட்டுச் சிறையில் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க அவருக்குக் குறைந்த கலோரி உணவு கிடைக்கும் என்பதால் வீட்டுச் சிறையில் அவரை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் உடல் பருமனைக் காரணம் காட்டி இத்தாலி நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ள சம்பவதிற்கு அங்கே பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.