Breaking News

மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் வேலைநிறுத்தம்; ஸ்தம்பித்த சென்னை - பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்...!!

மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் வேலைநிறுத்தம்; ஸ்தம்பித்த சென்னை - பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்...!!

இந்தியா: தமிழ்நாடு

சென்னையில் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கோடம்பாக்கம், தியாகராய நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லை என லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தென் சென்னை முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

போரூர் அருகே குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கிரீன்வேஸ் சாலை பகுதியில் உள்ள சுமார் 6000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையங்களில் ஒரு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்யாததால் லாரிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.