ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Botany இல் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிற்பகல் 2.40 மணியளவில் Botany சாலை மற்றும் Golfland Drive சந்திப்பிற்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இரண்டாவது நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் வாகன சாரதிகள் தாமதங்களை எதிர்பார்க்குமாறும், இயன்றவரை அப்பகுதியில் பயணிப்பதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விபத்து பிரிவு தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளது.