Breaking News

Dunedin இல் நபர் ஒருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்தவர் கைது...!!

Dunedin இல் நபர் ஒருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்தவர் கைது...!!

Dunedin இல் நபர் ஒருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.

இன்று காலை 10.10 மணியளவில் Heriot Row என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆயுதமேந்திய பொலிஸார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர் மற்றும் முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள பள்ளி பூட்டப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.