Breaking News

தெற்கு ஆக்லாந்தில் தீப்பிடித்து எரிந்த உலோகக் குவியல் - மக்களுக்கு நச்சு புகை எச்சரிக்கை...!!

தெற்கு ஆக்லாந்தில் தீப்பிடித்து எரிந்த உலோகக் குவியல் - மக்களுக்கு நச்சு புகை எச்சரிக்கை...!!

தெற்கு ஆக்லாந்தின் Favona என்ற இடத்தில் இன்று காலை பழைய கார்களின் உதிரி பாகங்கள் தீப்பிடித்ததையடுத்து, தெற்கு ஆக்லாந்து மக்களுக்கு நச்சுப் புகை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பிளெட்சர் டிரைவில் நள்ளிரவு 12 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

49,000 கன மீட்டர் உலோகக் குவியல் தீப்பிடித்து எரிவதை கண்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்தது.

FENZ சம்பவக் கட்டுப்பாட்டாளர் Phil Larcombe கூறுகையில் தீ பற்றி எரியும் போது கிளம்பிய நச்சு புகையால் ஓதாஹுஹூ பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

இருப்பினும் புகை இன்று காலை இருந்ததை விட சற்று குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மக்கள் தங்களை, தங்கள் விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே தெற்கு ஆக்லாந்தில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நச்சுப் புகையை தவிர்க்க கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இரசாயனங்கள் எரியவில்லை, ஆனால் பிளாஸ்டிக்கின் கலவைகள் உதிரி உலோகங்களுடன் கலந்ததால் நச்சுத்தன்மை பிரச்சினை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

தீ "கட்டுப்பாட்டில் உள்ளது" ஆனால் அதை முழுமையாக அணைக்க நீண்ட நேரம் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும், தீ விபத்து இடம்பெற்றுள்ள பகுதியை அண்மித்து செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.