Breaking News

ஆக்லாந்து - East Tamaki Heights பகுதியில் இடம்பெற்ற மோசமான விபத்தில் ஒருவர் பலி...!!

ஆக்லாந்து - East Tamaki Heights பகுதியில் இடம்பெற்ற மோசமான விபத்தில் ஒருவர் பலி...!!

ஆக்லாந்து புறநகர் பகுதியான East Tamaki Heights பகுதியில் இன்று காலை வயதானவர்கள் அல்லது ஊனமுற்றவர்கள் பயணிக்கும் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலை 10.40 மணியளவில் Kilkenny‌‍ Drive இல் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவர் வயதான பெண்மணி என பொலிஸார் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், தீவிர விபத்துப் பிரிவு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.