Breaking News

மது அருந்திவிட்டு தனது 11 வயது மகளுடன் Dunedin இற்கு பயணித்த பெண் - ஓட்டுநர் உரிமம் ரத்து...!!

மது அருந்திவிட்டு தனது 11 வயது மகளுடன் Dunedin இற்கு பயணித்த பெண் -  ஓட்டுநர் உரிமம் ரத்து...!!

பெண் ஒருவர் மது அருந்திவிட்டு தனது 11 வயது மகளுடன் Christchurch இல் இருந்து Dunedin இற்கு செல்லும் வழியில், சாலை நடுவில் பாதசாரிகள் பாதுகாப்பாக நிற்க அமைக்கப்பட்டுள்ள சிறிய மேடைப் பகுதியில் காரை மோதியுள்ளார்.

குறித்த பெண் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வரம்பை விட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் 39 வயதான அந்த பெண் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தையைப் பாதுகாக்கத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மூத்த சார்ஜென்ட் அந்தோனி பாண்ட் இது தொடர்பில் கூறுகையில்...

அந்த பெண் Dunedin இற்கு செல்வதற்கு முன் Christchurch இல் மது அருந்தியதாக கூறினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் Christchurch இல் இருந்து 360 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்ட பிறகு டன்னீடில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ள ஒரு போக்குவரத்து மேடைப் பகுதியில் காரை மோதியதாகக் பாண்ட் கூறினார்.

பின் அந்த பெண்ணும் அவரது மகளும் வாகனத்தை விட்டு இறங்கி வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தனர்.

இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் இருந்து இருநூறு மீட்டர் தொலைவில் அவர்களை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் அந்த பெண் 1191 மைக்ரோகிராம் அளவு ஆல்கஹால் அருந்தி இருந்தமை கண்டறியப்பட்டது.

இது  சட்ட வரம்பு 250mg ஐ விட நான்கு மடங்கு அதிகம்.

இதனையடுத்து அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதுடன் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.