Breaking News

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் - அனைவரும் நலம்..!!

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் - அனைவரும் நலம்..!!

இந்தியா

ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். சில நேரங்களில் அபூர்வமாக ஒரே பிரசவத்தில் 3, 4 குழந்தைகள் கூட பிறப்பதுண்டு.

அப்படியே பிறந்தாலும் அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருப்பார்களா என்பது கேள்விக்குறி தான். ஆனால் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  அனிதா என்ற பெண், ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது உள்ளூர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்தது.

எனவே அவருக்குப் பிரசவம் பார்க்க போதிய வசதி இல்லாத காரணத்தால், அப்பெண்ணை ராஞ்சி மருத்துவமனைக்குச் செல்ல, அம்மருத்துவமனை பரிந்துரை செய்தது.

இதனையடுத்து அப்பெண்ணுக்கு  5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றன.

பொதுவாக ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பது 55 மில்லியன் பிரசவத்தில் ஒன்றுதான் நடக்கும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 7 குழந்தைகள் ஆண்பிள்ளைகள்.

இதுதான் இப்போது உலக சாதனையாக இருந்து வருகிறது.

முன்னதாக மாலி நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு 2021-ம் ஆண்டு மே மாதம் 9 குழந்தைகள் பிறந்திருந்தன.