இந்த மாத தொடக்கத்தில் தெற்கு ஆக்லாந்து பல்பொருள் அங்காடியில் பாதுகாவலர் ஒருவரை தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 14ஆம் திகதி Manurewa வில் Browns வீதியில் அமைந்துள்ள குறித்த பல்பொருள் அங்காடியில் நுழைந்த திருடர்கள் பல பொருட்களை திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சந்தர்ப்பத்தில் பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பாதுகாவலர் வீட்டில் தொடர்ந்து குணமடைந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 மற்றும் 29 வயதுடைய ஆண்கள், இன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.