Breaking News

குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் அதிகரிப்பு – வைத்தியர் தீபால் பெரேரா

குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் அதிகரிப்பு – வைத்தியர் தீபால் பெரேரா

இந்த நாட்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை ஆலோசகர் மற்றும் குழந்தை நல மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மழை காரணமாக இன்புளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும், எந்தவொரு குழந்தைக்கும் இன்புளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்றும், இதுதவிர மழையால் குழந்தைகளுக்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.