Breaking News

என்னை பார்க்க வரமாட்டீங்களா?; ஏக்கத்துடன் கேட்ட குட்டி ரசிகை - ஆசையை நிறைவேற்றிய விஜய்...!!

என்னை பார்க்க வரமாட்டீங்களா?; ஏக்கத்துடன் கேட்ட குட்டி ரசிகை - ஆசையை நிறைவேற்றிய விஜய்...!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய்க்கு பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளின் மனதிலும் தனி இடம் இருக்கிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒருவர், "விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க" என்று வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனையடுத்து தன்னை பார்க்க வருமாறு கேட்ட குட்டி ரசிகையுடன் நடிகர் விஜய் நேற்றைய தினம் வீடியோ காலில் பேசியுள்ளார்.

மேலும் அந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார் நடிகர் விஜய்.

விஜய்யுடன் பேசிய அந்த குழந்தையும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.