Breaking News

ஆபத்தானவராக கருதப்படும் 74 வயது மூதாட்டியை தேடும் ஆக்லாந்து பொலிஸார்...!!

ஆபத்தானவராக கருதப்படும் 74 வயது மூதாட்டியை தேடும் ஆக்லாந்து பொலிஸார்...!!

ஆக்லாந்தில் தேடப்பட்டு வரும் ஆபத்தான 74 வயது மூதாட்டியை பொதுமக்கள் அணுக வேண்டாம் என்று பொலிஸார் எச்சரித்து வருகின்றனர்.

பரோலில் விடுவிக்கப்பட்ட குறித்த மூதாட்டி கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

பிரோன்வின் வார்விக் என்ற அந்த மூதாட்டிக்கு ஆக்லாந்து முழுவதும் தொடர்புகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் மிகவும் ஆபத்தானவர் என்றும் அவரை அணுகக் கூடாது என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அந்த மூதாட்டியை பார்த்தவர்கள் உடனடியாக 111 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளவும்.