Breaking News

"தொப்பி, கண்ணாடி அணிந்திருந்தால் எடப்பாடி எம்ஜிஆர் ஆகிவிடுவாரா?" - விபி துரைசாமி விமர்சனம்...!!

"தொப்பி, கண்ணாடி அணிந்திருந்தால் எடப்பாடி எம்ஜிஆர் ஆகிவிடுவாரா?" - விபி துரைசாமி விமர்சனம்...!!

இந்தியா: தமிழ்நாடு

ஒரு காலத்தில் எம்ஜிஆர், அடுத்தாக ஜெயலலிதா கையில் இருந்த அதிமுக இன்று எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் பூரித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரான பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்றனர். பட்டாசு வெடித்து உற்சாகப்படுத்தினர். காரை விட்டு எடப்பாடி பழனிசாமி இறங்கியதுமே, அவர்மீது மலர்களை தூவி வரவேற்றனர். அங்கிருந்த தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமியின் தலைக்கு எம்ஜிஆர் தொப்பியை அணிவித்தனர். பிறகு, எம்ஜிஆர் அணிவதைபோலவே கருப்பு கலர் கூலிங்கிளாஸை எடப்பாடிக்கு தொண்டர்கள் அணிவித்தனர்.

பிறகு, பிங்க் கலரில் ஒரு சால்வை போர்த்தப்பட்டது. தொப்பி தலையில் வைத்து, கூலிங் கிளாஸை மாட்டிவிட்டதுமே, எடப்பாடி பழனிச்சாமி பூரித்து போய் அதனை ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பான புகைப்படமும் வீடியோவும் வெளியான நிலையில் தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வி.பி.துரைசாமி, "தொப்பி, கண்ணாடி அணிந்தால் எம்ஜிஆரா? எங்களுக்கு தெரிந்தது ஒரே எம்.ஜி‌.ஆர் தான்" என்றார்.