Breaking News

நியூசிலாந்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மரணம்...!!

நியூசிலாந்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மரணம்...!!

நியூசிலாந்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆக்லாந்தில் இறந்துள்ளார் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரேபிஸ் எனப்படுவது நாய்கள் மற்றும் பிற பாலூட்டிகளில் இருந்து பரவும் ஆபத்தான வைரஸ் நோய்.

இந்நிலையில் தற்போது இந்த நோயால் உயிரிழந்த நபர்
வெளியூர் பயணி ஒருவர் என கூறப்பட்டுள்ளது.

பொது சுகாதார அமைச்சகத்தின் சுகாதார இயக்குனர் டாக்டர் நிக் ஜோன்ஸ் கூறுகையில், ஒருவருக்கு ரேபிஸ் பரவுவது மிகவும் அரிதானது, எனவே பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

மார்ச் தொடக்கத்தில் மருத்துவமனையில் அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சந்தேகத்திற்குரிய ரேபிஸ் தொற்று இருப்பதாக அந்த நபருக்கு அறிவிக்கப்பட்டது, எனவே ஆக்லாந்து சிட்டி மருத்துவமனை மற்றும் வாங்கரேய் மருத்துவமனையில் அவருக்கு தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது என Health New Zealand ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரேபிஸ் நோய் பொதுவாக ஒரு நபரை நாய் கடிக்கும் போது பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீரில் இருந்து பரவும். அந்த நபரை நாய் கடித்ததற்கும் அறிகுறிகளின் வளர்ச்சிக்கும் இடையில் சிகிச்சை பெறவில்லை என்றால், ரேபிஸ் நோய் பொதுவாக ஆபத்தானது.

நியூசிலாந்தின் விலங்குகளுக்கு அல்லது மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் இல்லை என்றும் Health New Zealand தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால், நிலைமை மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.

மேலும் நியூசிலாந்தில் உள்ள விலங்குகளில் ரேபிஸ் இல்லை என அவர் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் ரேபிஸ் தொற்று இருக்கலாம் என அஞ்சும் நியூசிலாந்தர்கள் தங்கள் மருத்துவர் மூலம் தடுப்பூசி பெறலாம் என்று அவர் கூறினார்.