Breaking News

1.4 மில்லியனுக்கும் அதிகமான Pfizer தடுப்பூசிகள் காலாவதி - Health New Zealand தகவல்...!!

1.4 மில்லியனுக்கும் அதிகமான Pfizer  தடுப்பூசிகள் காலாவதி - Health New Zealand தகவல்...!!

1.4 மில்லியனுக்கும் அதிகமான Pfizer  தடுப்பூசிகள் காலாவதியாகியதை அடுத்து அவை அழிக்கப்பட்டதாக Health New Zealand தெரிவித்துள்ளது.

Health New Zealand இப்போது பூஸ்டர் தடுப்பூசி பெறுபவர்களுக்கு ஒரு புதிய Bivalent தடுப்பூசியை வழங்குகிறது.

இந்த தடுப்பூசியை சனிக்கிழமை முதல் மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தடுப்பூசி நிபுணர் ஹெலன் பெட்டூசிஸ்-ஹாரிஸ் கூறுகையில், மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள தாமதம் ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, சிலருக்கு சமீபத்தில் வைரஸ் வந்திருக்கலாம், மற்றவர்கள் புதிய தடுப்பூசிக்காக காத்திருக்கலாம்.

மேலும் கொவிட் பாதிப்பின் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் தங்களால் இயன்ற அளவு பாதுகாப்பைப் பெறுவது முக்கியம், என்று அவர் கூறினார்.