Breaking News

வெலிங்டன் கடற்கரையில் மீட்கப்பட்ட மனிதக் கால்; பொதுமக்கள் அதிர்ச்சி - தொடரும் தேடுதல் பணிகள்...!!!

வெலிங்டன் கடற்கரையில் மீட்கப்பட்ட மனிதக் கால்; பொதுமக்கள் அதிர்ச்சி - தொடரும் தேடுதல் பணிகள்...!!!

சனிக்கிழமையன்று வெலிங்டனில் உள்ள Petone கடற்கரையில் மனிதக் காலுடன் ஒரு காலணி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடற்கரையைச் சுற்றி பொலிஸார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை காலை 8 மணியளவில் பொதுமக்களால் காலணியுடன் மனிதக் கால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

வெலிங்டன் பொலிசார் அப்பகுதியைச் சுற்றி நிலம் மற்றும் நீரில் சோதனை மேற்கொண்டனர், ஆனால் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை.

இச் சம்பவத்தால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே இன்று Petone துறைமுகத்தில் நீர்மூழ்காளர் ஒருவருடன் பொலிஸ் கப்பல் தேடுதல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.