Breaking News

New Plymouth இல் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் கைது...!!

New Plymouth இல் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் கைது...!!

இந்த மாத தொடக்கத்தில் New Plymouth இல் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 19 அன்று Penrod Drive என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் மற்றும் டிரைவ்வேயில் ஒரு வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி New Plymouth மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பறியும் சார்ஜென்ட் பைரன் ரீட், சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறினார்.

இந்த கைது பொதுமக்களுக்கு ஒருவித நம்பிக்கையை அளிக்கும் என நம்புகிறோம், என்றார்.

ஒவ்வொருவருக்கும் தங்கள் சமூகத்தில் பாதுகாப்பாக உணர வேண்டும், நாங்கள் இந்த விடயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.